பிரதமர் அலுவலகம்

செகந்திராபாத் ரயில் நிலையத்தில், செகந்திராபாத் – திருப்பதி வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

Posted On: 08 APR 2023 5:00PM by PIB Chennai

தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில நிலையத்தில், செகந்திராபாத் – திருப்பதி வந்தே பாரத்  அதிவிரைவு ரயிலை பிரதமர் இன்று கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.  ரயில் நிலையத்திற்கு வந்த பிரதமர், வந்தே பாரத் ரயிலை பார்வையிட்டார்.  ரயில் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடினார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :

“கொடியசைத்துத் தொடங்கிவைத்த வந்தே பாரத்  விரைவு ரயில் செகந்திராபாத்துக்கும், திருப்பதிக்கும் இடையே போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். இந்த ரயிலுக்காக தெலங்கானா மற்றும் ஆந்திர மாநில மக்களை நான் வாழ்த்துகிறேன்.

செகந்திராபாத் – திருப்பதி அதிவிரைவு ரயில் ஐதராபாத் தகவல் தொழில்நுட்ப நகரத்தையும் வெங்கடேச பெருமாள் உறையும் திருப்பதியையும் இணைக்கிறது. 3 மாத காலத்திற்குள் தெலங்கானாவிலிருந்து  புறப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும். இருநகரங்களுக்கும் இடையிலான பயண நேரத்தில் இரண்டரை மணி நேரத்தை இந்த ரயில், குறைக்கும். இது குறிப்பாக பக்தர்களுக்கு பெரும் பயனளிக்கும்.

பிரதமருடன் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

** 

SM/PKV/KPG/DL



(Release ID: 1914930) Visitor Counter : 121