பிரதமர் அலுவலகம்
இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2023 10:30AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“சலீம் துரானி, மிகப்பெரும் ஆற்றல் கொண்டவர், தன்னுள்ளே ஒரு கிரிக்கெட் பல்கலைக்கழகம், கிரிக்கெட் உலகில் இந்தியாவின் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றினார். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் தனது தனித்துவமான பாணிக்கு பெயர் பெற்றவர். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’’.
“சலீம் துரானி அவர்கள் குஜராத்துடன் நீண்டகால தொடர்பு கொண்டிருந்தார். சௌராஷ்டிரா மற்றும் குஜராத் அணிக்காக சில ஆண்டுகள் அவர் விளையாடினார். குஜராத்தையும் தனது இருப்பிடமாகக் கொண்டிருந்தார். அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அவரது பன்முக ஆளுமையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவரது இழப்பு ஈடு செய்யமுடியாதது’’
பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி உடனான தனது சந்திப்பு பற்றிய படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
**********
AD/CJL/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1913055)
வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam