பிரதமர் அலுவலகம்
அடிமட்ட அளவில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை மனதின் குரல் கொண்டாடுகிறது: பிரதமர்
Posted On:
31 MAR 2023 9:08AM by PIB Chennai
“இந்தியாவின் குரல்- மோடியும், மாற்றத்தை ஏற்படுத்தும் அவரது மனதின் குரலும்” என்ற புத்தகத்தை வெளியிட்ட சி.என்.என் நியூஸ் 18 நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நியூஸ் 18 ரைசிங் இந்தியா உச்சிமாநாட்டில் குடியரசு துணைத்தலைவரால் வெளியிடப்பட்ட இந்த புத்தகம், இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களையும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் அங்கீகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
குடியரசு துணைத்தலைவரின் ட்விட்டர் பதிவிற்கு திரு நரேந்திர மோடி அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
“அடிமட்ட அளவில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை மனதின் குரல் கொண்டாடும் விதம் தான், நிகழ்ச்சியின் சிறப்பம்சம். இந்த நிகழ்ச்சி 100 அத்தியாயங்களை நிறைவு செய்யும் வேளையில், இதில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் மற்றும் அவர்கள் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை அங்கீகரிக்கும் சி.என்.என் நியூஸ்18 போன்ற நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.”
***
(Release ID: 1912399)
AD/RB/RR
(Release ID: 1912476)
Visitor Counter : 155
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam