வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பூஜ்ஜிய கழிவுகளின் சர்வதேச தினத்தன்று கழிவுகளற்ற நகரங்களுக்கான பேரணி

Posted On: 28 MAR 2023 12:58PM by PIB Chennai

‘கழிவுகளின் குறைப்பு மற்றும் மேலாண்மையின் நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை எட்டுதல்' என்ற பூஜ்ஜிய கழிவுகளின் சர்வதேச தினம் 2023 கருப்பொருளுக்கு இணங்க பூஜ்ஜிய கழிவுகளின் சர்வதேச தினம்: கழிவுகளற்ற நகரங்களுக்கான பேரணியை புதுதில்லியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் நடத்துகிறது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப் ஆகியோர் முன்னிலையில் சுமார் 350 பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 29, 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் கழிவுகளற்ற நகரங்களுக்காக பெண்கள் தலைமையிலான பேரணியில் ஏராளமானோர் கலந்து கொள்வதோடு தூய்மைச் சுடர் அணிவகுப்பும் நடைபெறும். அதைத்தொடர்ந்து பேரணியில் கலந்து கொள்ளும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பொது இடங்கள், திறந்த வெளி வளாகங்கள், நீர்நிலைகள், ரயில் வழித்தடங்கள், பொது கழிவறைகளில் தூய்மை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். சுடர் அணிவகுப்பில் பங்கேற்பதற்காக சுமார் 2000 நகரங்கள் ஏற்கனவே இணைந்துள்ளன.

                             

கழிவுகளற்ற நகரங்களுக்கு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு போன்றவை குறித்த விவாதங்களும், மேயர்களுடன் கலந்துரையாடல்களும் நடைபெறும்.

***

 (Release ID: 1911368)



(Release ID: 1911438) Visitor Counter : 118