தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய அமைச்சர்கள் திரு அனுராக் தாக்கூர், திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

Posted On: 26 MAR 2023 11:20AM by PIB Chennai

தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்  திரு அனுராக் தாக்கூர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர்  ஜெனரல் வி.கே. சிங் ஆகியோர்  கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேசத்துக்கான இண்டிகோவின் விமான சேவையை எளிதாக்கியதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்தார்.  தற்போது இந்தியா முழுவதிலுமிருந்து ஹிமாச்சலத்திற்கு வரும் பயணிகள் டெல்லிக்குச் சென்று பின்னர் மாநிலத்திற்கான இணைப்பு விமானங்களில் ஏற வேண்டும் என்று கூறிய அவர் இந்நிலையை பெரிய விமான நிலையங்களால் மாற்ற முடியும் என்றார்.  ஒரு பெரிய விமான நிலையம் பயணிகளுக்கு நேரடி தடையற்ற இணைப்பை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

நாட்டில் விமான நிலைய உள்கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்திய பெருமை  பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என்று கூறிய திரு தாக்கூர்குறுகிய காலத்தில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

தரம்ஷாலா விமான நிலையம் ஐந்து மாவட்டங்களை எளிதாக இணைப்பதுடன்மாநிலத்தின் பாதி மக்கள் தொகைக்கு நேரடியாக பயனளிக்கிறது என்று அவர் கூறினார்.

 

இந்த ஒற்றை இண்டிகோ விமானம், மாநிலத்தின் பாதிப் பகுதியையும், பஞ்சாபில் உள்ள சில இடங்களையும் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதில் நீண்ட தூரம் செல்கிறது.

விமானநிலைய கட்டமைப்பு  விரிவடைந்து தற்போது 1376 மீட்டர் ஓடுபாதையைக் கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்தார். இடம் கிடைத்தால்  ஓடுபாதையை மேலும் நீட்டிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் கடந்த 65 ஆண்டுகளில் சாதிக்காததை, கடந்த 9 ஆண்டுகளில் 148 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் உருவாக்கப்பட்டதன் மூலம் சாதித்துள்ளோம் என்றார். அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையை 200க்கு மேல் கொண்டு செல்லும் இலக்கை நோக்கி அமைச்சகம் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். இந்த முயற்சியானது பெரிய மெட்ரோ விமான நிலையங்களுக்கும், கடைசி மைல் இணைப்பை வழங்கும் தொலைதூர விமான நிலையங்களுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் திரு அனுராக் தாக்கூரின் முயற்சிகளை திரு சிந்தியா பாராட்டினார், மேலும் அவரது கடுமையான முயற்சிகள் காரணமாக, தரம்சாலா இன்று பிராந்திய மற்றும்  தேசிய கிரிக்கெட்டின் மையமாக உள்ளது. தரம்சாலாவில் உள்ள அற்புதமான ஸ்டேடியத்தை உலகின் மிகச் சிறந்தது என அவர் பாராட்டினார்.

"சிவில் விமானப் போக்குவரத்துத் துறை முழுமையான ஜனநாயகமயமாக்கலைக் கண்டுள்ளது. மேலும், விமானங்கள் பறப்பதை மட்டுமே பார்க்கக்கூடியவர்கள் இன்று அதில் பறக்கிறார்கள்" என்று குறிப்பிட்ட அமைச்சர், மேலும் உடான் திட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை இந்தியாவின் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை 1 கோடியே 15 லட்சமாக அதிகரித்துள்ளது என்றார்.

***

SRI/PKV/DL(Release ID: 1910891) Visitor Counter : 94