பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஒரு காலத்தில் தடைகள், வன்முறைகளுக்கு பெயர் பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் தற்போது அதன் வளர்ச்சிக்காகப் பெயர் பெற்றுள்ளன : பிரதமர்

Posted On: 26 MAR 2023 10:47AM by PIB Chennai

வன்முறைக்குப் பெயர் பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் தற்போது அதன் முன்னேற்றங்கள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் அறியப்படுவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

நாகாலாந்து, அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஏஎஃப்பிஎஸ்ஏ-வின் கீழ் அறிவிக்கப்பட்ட பதற்றம் மிகுந்த பகுதிகளைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.

 

வடகிழக்கு இந்தியாவின் பாதுகாப்பு நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார்.

 

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர், "வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளன. ஒரு காலத்தில் தடைகள் மற்றும் வன்முறைகளுக்கு பெயர் பெற்ற பகுதி, இப்போது அதன் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெயர் பெற்றுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

***

SRI/CR/DL(Release ID: 1910884) Visitor Counter : 95