பிரதமர் அலுவலகம்
தார்வார்டில் அமையவுள்ள மின்னணு உற்பத்திக் குழுமம் தார்வார்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
25 MAR 2023 11:17AM by PIB Chennai
தார்வார்டில் அமையவுள்ள மின்னணு உற்பத்திக் குழுமம் தார்வார்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். இது உற்பத்தி மற்றும் புதுமை உலகில் கர்நாடகாவின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தும் என்றும் மோடி கூறினார்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பதிவில், கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் மின்னணு உற்பத்திக்கான குழுமம் அமையவுள்ளதாக தெரிவித்தார். இது, 1,500 கோடி முதலீட்டை ஈர்த்து 18,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கி மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் ட்விட்டர் பதிவுக்குப் பிரதமர்,
"இது தார்வார்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு உலகில் கர்நாடகாவின் முன்னேற்றத்தையும் அதிகரிக்கும்." என்று பதிலளித்துள்ளார்.
***
AD/CJL/DL
(रिलीज़ आईडी: 1910630)
आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam