பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் உதவித்தொகை அறிவிப்பு

Posted On: 22 MAR 2023 8:57PM by PIB Chennai

காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் உதவித்தொகையாக வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் உதவித்தொகையாக வழங்கப்படும்.”

***

(Release ID: 1909735)

GS/RB/KRS


(Release ID: 1909808) Visitor Counter : 156