சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘கடைக்கோடி குடிமகனுக்கும் உலகளாவிய மருத்துவ சேவைகள்’ என்ற கருப்பொருளோடு நடைபெற்ற மின்னணு சுகாதார மாநாட்டில் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்

Posted On: 20 MAR 2023 1:50PM by PIB Chennai

‘கடைக்கோடி  குடிமகனுக்கும் உலகளாவிய மருத்துவ சேவைகள்’ என்ற கருப்பொருளோடு நடைபெற்ற மின்னணு சுகாதார மாநாட்டில் டாக்டர் மன்சுக் மாண்டவியா  காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

 சுகாதார சேவைகளை அளிப்பதில் மின்னணு சுகாதார முறை சிறப்பானது என்று கூறினார். இதில் ஒட்டுமொத்த உலகளாவிய சுகாதார சேவை இலக்குகளை அடைய செய்வதற்கான திறன் உள்ளதாக தெரிவித்தார்.

மின்னணு சுகாதார முறையை உலகமயமாக்கலில் உள்ள சவால்கள் மற்றும் அதனை உலகம் முழுவதும் கிடைக்க செய்வதற்கான முறைகள் குறித்து குறிப்பிட்டார்.  உலகம் ஒரு குடும்பம் என்ற அடிப்படையில்  கோ-வின், இ-சஞ்சீவனி, ஆரோக்கிய சேது போன்ற செயலிகளை இந்தியா உருவாக்கியதன் மூலம் உலகளாவிய சுகாதார சேவைக்கு இந்தியா காட்டும் அக்கறையை இது எடுத்துக்காட்டுவதாக கூறினார்.

இ-சஞ்சீவனி என்ற தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனை மூலம் 100 மில்லியனுக்கும் மேலான ஆலோசனைகள், 2.2 பில்லியனுக்கு மேலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது, பிரதமரின் உடல்நல சுகாதாரத்திட்டத்தின் கீழ் 500 மில்லியன் குடிமக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு ஆகியவை குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

***

SRI/IR/AG/KRS


(Release ID: 1908795) Visitor Counter : 192