பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

இந்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட்டில் உள்ள அரசின் பங்குகளை ஒரு பகுதி-விற்பனைக்காக பங்குச் சந்தைகளில் ஆரம்பப் பொதுச் சலுகையின் மூலம் பட்டியலிடவும் புதிய சம பங்குகளை வெளியிட்டு ஐஆர்இடிஏ நிதி திரட்டவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 17 MAR 2023 7:24PM by PIB Chennai

புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கவல்ல

எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட்டில் உள்ள அரசின் பங்குகளை ஒரு பகுதி-விற்பனைக்காக பங்குச் சந்தைகளில் ஆரம்பப் பொதுச் சலுகையின் மூலம் பட்டியலிடவும் புதிய சம பங்குகளை வெளியிட்டு ஐஆர்இடிஏ நிதி திரட்டவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு  ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியலிடும் நடைமுறையை முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாகத்துறை செயல்படுத்தும்.

ஆரம்பச் சலுகை விலையின் மூலம் பங்குகளுக்கான முதலீட்டாளர் தேவையை உருவாக்கி, கைப்பற்றி, பதிவு செய்யும் நடைமுறை (புக் பில்டிங்) அடிப்படையில் தலா ரூ.  10.00 மதிப்பிலான 13.90 கோடி புதிய சம பங்குகளை ஐஆர்இடிஏ பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஜூன், 2017 இல் எடுக்கப்பட்ட பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் முந்தைய முடிவை இந்த முடிவு மாற்றியுள்ளது. மார்ச் 2022-ல் ரூ. 1500 கோடிக்கான மூலதனத்தை அரசு வழங்கியதைத் தொடர்ந்து மூலதனக்  கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இந்த உடனடி முடிவு அவசியமானது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1908115

-----

AD/SMB/KPG(Release ID: 1908323) Visitor Counter : 138