சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘ஒரே சுகாதாரம்: மிகச்சிறந்த சுகாதாரத்திற்கு ஒருங்கிணைந்த, கூட்டான, பல்துறை அணுகுமுறை’ என்பது குறித்து சிஐஐ பங்குதாரர் உச்சி மாநாடு 2023-ல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்

Posted On: 15 MAR 2023 2:33PM by PIB Chennai

ஒட்டுமொத்தமான, ஒருங்கிணைந்த சூழல் மற்றும் இயற்கைக்கு உகந்த கொள்கை உருவாக்கம் என்பதை உலக சுகாதாரம் மற்றும்  ஆரோக்கியத்திற்கான ஒரே குடும்பம் என்ற நமது தத்துவத்துடன் இணைத்து “ஒரே பூமி ஒரே சுகாதாரம்” என்ற தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதில் இந்தியா  தலைமையேற்கும் தருணம் இதுவாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், புதிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடனான தீர்வுகளை முன்னிலைப்படுத்துவது வணிக ரீதியாக சாத்தியமாவதுடன், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் மாற்றும் வலுவான அரசியல் உறுதியை இந்தியா பெற்றுள்ளது. புதுதில்லியில் இன்று ‘ஒரே சுகாதாரம்: மிகச்சிறந்த சுகாதாரத்திற்கு ஒருங்கிணைந்த, கூட்டான, பலதுறை அணுகுமுறைஎன்பது குறித்து சிஐஐ பங்குதாரர் உச்சி மாநாடு  2023-ல் உரையாற்றிய  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இதனைத் தெரிவித்தார்.

தங்களைப்பற்றி மட்டுமே சிந்திக்காமல், உலக அளவில் கூட்டான செயல்பாடுகள் பற்றி சிந்திப்பவர்களால் மட்டுமே “ஒரே பூமி ஒரே சுகாதாரம்” என்பது சாத்தியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஒரு நாட்டின் சுகாதாரமும், ஆரோக்கியமும் மற்றொரு நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் சுகாதாரத்துறை என்பது ஒரு நாட்டின் வரம்புக்கு உட்பட்டதாக  இருக்க இயலாது என்று டாக்டர் மாண்டவியா கூறினார். ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் உலகத்தில் நாம் வாழ்கிறோம். உலகளாவிய பெருந்தொற்று எந்தவொரு நாட்டையும் விட்டுவிடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

சுகாதார கவனிப்பை அதிகப்படுத்துவதற்காக மக்கள் மருந்தக மையங்கள், நகர்ப்புற சுகாதார மையம், ஆயுஷ்மான் பாரத் மூலம் குறைந்த செலவில்  மருந்துகள் கிடைக்கச்செய்யும் அரசின் முன்முயற்சிகளை இந்த மாநாட்டில் பங்கேற்ற உரையாளர்கள் பாராட்டினர்.

இந்த மாநாட்டில் சிஐஐ அமைப்பின் பல்வேறு பிரிவுகளுக்குத் தலைமையேற்றுள்ள டாக்டர் நரேஷ் ட்ரெஹான்,  டாக்டர் ராஜேஷ் ஜெயின், டாக்டர் சுசித்ரா எல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

***


AD/SMB/RS/KPG


(Release ID: 1907242) Visitor Counter : 136