குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் 2023 மார்ச் 11 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்
Posted On:
10 MAR 2023 3:43PM by PIB Chennai
பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் 2023 மார்ச் 11 அன்று காலை 10 மணிக்கு பிரதமர் உரையாற்றுகிறார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்துவது குறித்து ஆலோசனைகளைப் பெறும் வகையில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகளில் 12வதாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் (பிஎம். விகாஸ்), கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அளவு மற்றும் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தை வாய்ப்புகள் அவர்களுக்கு ஏற்படுத்தி தரப்படுகிறது.
பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான இணைய வழிக் கருத்தரங்கு கீழ்க்கண்ட நான்கு முக்கிய அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
- எளிதில் கடன் கிடைக்க ஏற்பாடு செய்தல், மின்னணு பணப்பரிவர்தனைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு
- மேம்பட்ட திறன் பயிற்சி, நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான ஏற்பாடுகள்
- உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு இணைப்பை ஏற்படுத்தி, சந்தைப்படுத்துதல் ஆதரவு வழங்குதல்
- திட்டத்தின் கட்டமைப்பு, பயனாளிகள் தேர்வு மற்றும் செயல்பாட்டு நடைமுறை
இந்த இணையவழிக் கருத்தரங்கில் சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள், தொழில்துறையினர், நிதி நிறுவனப் பிரதிநிதிகள், வல்லுநர்கள், தொழில்முனைவோர், குறு,சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகப் பிரதிநிதிகள், ஜவுளி அமைச்சகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
***
AP/PLM/SG/KPG
(Release ID: 1905630)
Visitor Counter : 140