நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நடுத்தர வருவாய் பிரிவினருக்கு 2019 முதல் 20,557 வீடுகள் கட்டப்பட்டுள்ளன

Posted On: 04 MAR 2023 1:32PM by PIB Chennai

நடுத்தர வருவாய் பிரிவினருக்கு குறைந்த விலையில் வீடு வழங்குவதற்கான சிறப்புச் சாளர  நிதிஇந்தியாவின் மிகப்பெரிய சமூக தாக்க நிதியாகும். இது  முடங்கிய குடியிருப்பு திட்டங்களை முடிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

இந்த நிதியானது மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. ஸ்டேட் வங்கிக் குழும நிறுவனமான எஸ்பிஐசிஏபி நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவிலோ அல்லது உலகளாவிய சந்தைகளிலோ இந்த நிதிக்கு  ஒப்பிடக்கூடியது வேறு எதுவும் இல்லை .

இந்த நிதி, இதுவரை சுமார் 130 திட்டங்களுக்கு ரூ.12,000 கோடிக்கு அதிகமாக  ஒப்புதல் அளித்துள்ளது. 2019 இல் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில், நிதி ஏற்கனவே 20,557 வீடுகளை நிறைவு செய்துள்ளது . 30 சிறிய. நடுத்தர  நகரங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 81,000 வீடுகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

***

AP/PKV/DL



(Release ID: 1904174) Visitor Counter : 147