பிரதமர் அலுவலகம்
இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான ஸ்ரீ அன்னா தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான முக்கிய நடவடிக்கைக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
26 FEB 2023 10:36AM by PIB Chennai
இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான ஸ்ரீ அன்னா(சிறுதானியங்கள்) தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் 15 வகையான சிறுதானியங்களின் தரத்தை மதிப்பிட எஃப்எஸ்எஸ்ஏஐ இந்தியா 8 தர அளவுருக்களை நிர்ணயித்து நல்ல தரமான சிறுதானியங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான ஸ்ரீ அன்னா தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான முக்கிய படி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
***
SRI / CR / DL
(Release ID: 1902515)
Visitor Counter : 193
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam