மத்திய அமைச்சரவை

இந்தியாவின் 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 2024, ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 FEB 2023 12:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவின் 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 2024, ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் சட்டப்பூர்வமற்ற அமைப்பான இந்திய சட்ட ஆணையம் குறிப்பிட்ட கால இடைவெளியில் அமைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு 1955-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆணையம் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 2023 பிப்ரவரி 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

பல்வேறு சட்ட ஆணையங்கள், நாட்டின் வளர்ச்சி மற்றும் சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கிய பங்களிப்பு செலுத்தியுள்ளன.  இதுவரை சட்ட ஆணையம் 277 அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் சார்ந்த விவரங்கள்:

  • முழுநேரம் பணியாற்றும் தலைவர்
  • உறுப்பினர் செயலாளர் உள்பட 4 முழு நேர உறுப்பினர்கள்
  • சட்ட விவகாரங்கள் துறைச் செயலாளர், முன்னாள் அலுவலக உறுப்பினராக செயல்படுவார்
  • முழுநேர உறுப்பினர்கள் 5 பேருக்கு மிகாமல் ஆகியவற்றுடன் இந்த சட்ட ஆணையம் செயல்படும்

***

 AP/ES/AG/KRS



(Release ID: 1901363) Visitor Counter : 307