மத்திய அமைச்சரவை
இந்தியா, கயானா இடையே விமான சேவைகள் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
22 FEB 2023 12:46PM by PIB Chennai
இந்திய அரசுக்கும் கயானா அரசுக்கும் இடையே விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பான நடைமுறைகள் நிறைவடைந்ததாக தூதரக அளவிலான அறிவிப்புகள் பரிமாற்றம் செய்யப்பட்டதும் இது அமலுக்கு வரும்.
2012-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கயானாவில் வசிக்கும் மக்களில் 40 சதவீதத்தினர், இந்தியர்கள். இரு நாடுகளுக்கு இடையேயான விமான சேவை திட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். விமான சந்தையின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் விமான துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாராளமயமாக்கல் போன்ற முன்னேற்றங்களின் காரணமாக சர்வதேச விமான இணைப்பை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளுடன் விமான சேவைகள் ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகின்றன. தற்போது இந்தியா மற்றும் கயானா அரசுகளுக்கு இடையே விமான சேவைகள் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை.
இந்தியாவிற்கும் கயானாவிற்கும் இடையிலான புதிய விமான சேவைகள் ஒப்பந்தம், இருநாட்டு விமானங்களுக்கு வணிக வாய்ப்புகளை வழங்குவதுடன், மேம்பட்ட மற்றும் தடையற்ற இணைப்புக்கான சூழலையும் உருவாக்கும்.
***
AP/BR/KRS
(Release ID: 1901362)
Visitor Counter : 293
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam