பிரதமர் அலுவலகம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் ‘அன்னையருக்கு ஊட்டச்சத்து’ முன்முயற்சிக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2023 11:26AM by PIB Chennai
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மேற்கொண்டுள்ள ‘அன்னையருக்கு ஊட்டச்சத்து’ முன்முயற்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். திரு ஓம் பிர்லா, கோட்டா பகுதியைச் சேர்ந்த ராம்கஞ்ச்மண்டி என்னுமிடத்தில் இந்த இயக்கத்தை தொடங்கிவைத்துள்ளார். ஒவ்வொரு தாயும், சேயும் ஆரோக்கியமாக இருப்பதை இந்த முன் முயற்சி இலக்காகக் கொண்டுள்ளது.
இது குறித்த மக்களவைத் தலைவரின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு ;
“மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களின் ஊக்கமளிக்கும் முன்முயற்சி! ஆரோக்கியமான தாயையும், குழந்தையையும் கொண்ட முழு குடும்பத்தின் முன்னேற்றம் இதில் அடங்கியுள்ளது. இது வலுவான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கும்.”
***
(Release ID: 1900943)
SRI/PKV/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1900961)
வருகையாளர் எண்ணிக்கை : 264
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam