இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் கலந்து கொள்ள நிதி உதவியை மிஷன் ஒலிம்பிக் செல் (எம்ஓசி) வழங்க முடிவு
Posted On:
19 FEB 2023 2:46PM by PIB Chennai
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் 10 ஜூடோ வீரர்கள், 2 பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் 3 வாள் வீச்சு வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளில் (கிராண்ட்ஸ்லாம்கள்) கலந்து கொள்வதற்கான நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
3 டாப்ஸ் டெவலப்மெண்ட் உள்பட 10 ஜூடோக்கள் & 7 என்சிஓஇ வீரர்கள் உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜார்ஜியாவில் 21 நாட்களுக்குப் பயிற்சி பெறுவார்கள். அதே நேரத்தில் அவர்கள் உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா மற்றும் துருக்கியில் 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள்.
வீரர்களின் பங்கேற்புகா கட்டணம், விமானகீ கட்டணம், தங்கும் இடம்/போர்டிங், மருத்துவக் காப்பீட்டுச் செலவு, உள்ளூர் பயணம் மற்றும் உணவுச் செலவுகள் ஆகியவை இந்திய விளையாட்டு ஆணையத்தால் ஏற்கப்படும்.
ஜெர்மன் ஓபன், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப், சுவிஸ் ஓபன், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ், ஸ்பெயின் மாஸ்டர்ஸ் மற்றும் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் ஆகியவற்றில் போட்டியிட இரண்டு பேட்மிண்டன் வீரர்களுக்கான செலவையும் எம்ஓசி அங்கீகரித்துள்ளது.
ஃபென்சிங்கில், ஃபென்சிங் வீரர்களான லைஷ்ராம் மொரம்பா, ஸ்ரேயா குப்தா மற்றும் ஒய்னம் ஜுப்ராஜ் சிங் ஆகியோருக்கு மார்ச் மாதம் நடைபெறும் கேடட் & ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப், தாஸ்கண்ட் போட்டியில் பங்கேற்க நிதியுதவி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜுக்கு சிங்கப்பூர் தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதில் ஸ்ரீஹரி நடராஜுவின் தனிப்பட்ட பயிற்சியாளர் நிஹார் அமீன் மற்றும் பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன் பாலவெங்கடேசன் ஆகியோரின் சேவைக் கட்டணங்களும் அடங்கும்.
மேலும் இந்த இரண்டு நாள் சந்திப்பின் போது, எம்ஓசி உறுப்பினர்கள், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் பல்வேறு தேசிய கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர்.
***
AP / GS / DL
(Release ID: 1900558)
Visitor Counter : 163