பிரதமர் அலுவலகம்

ஜம்மு காஷ்மீரில் 3வது கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

Posted On: 11 FEB 2023 9:56AM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் 3வது கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள  பிரதமர் கூறியிருப்பதாவது;

“3வது கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். குல்மார்க்கின் அழகிய சுற்றுப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு கலாச்சாரத்தை உயர்த்தும்’’.

***

PKV/DL



(Release ID: 1898247) Visitor Counter : 164