தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிடி நேஷனல் தொலைக்காட்சி ஸ்வராஜ் தொடரை ஒளிபரப்பு செய்யவுள்ளது

Posted On: 08 FEB 2023 3:09PM by PIB Chennai

வரும் பிப்ரவரி 11, 2023 முதல் மதியம் ஒருமணிக்கு டிடி நேஷனல் தொலைக்காட்சி ஸ்வராஜ் தொடரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பு செய்யவுள்ளது.

            ஸ்வராஜ் - 75 அத்தியாயங்களைக் கொண்ட தொடர் - இந்தியாவிற்கு வாஸ்கோடகாமா வந்த காலம் தொட்டு, 15-ம் நூற்றாண்டிலிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் புகழ்பெற்ற வரலாற்றை வெளிக்கொண்டு வருவதுதான் இதன் நோக்கமாகும்.  குறிப்பாக, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நன்கு அறியப்படாதவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது தியாகங்களை இந்த தொலைக்காட்சி தொடர் மூலம் அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.

            கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதியன்று மத்திய உள்துறை, கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மற்றும்  இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஸ்வராஜ் தொலைக்காட்சித் தொடரை தொடங்கிவைத்தார்.

            கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த தொலைக்காட்சித் தொடர் ஹிந்தி மொழியில் டிடி நேஷனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து 9 பிராந்திய மொழிகளிலும் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, ஒடியா, அஸ்ஸாம்) ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

            ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஹிந்தி மொழியில் ஸ்வராஜ் தொலைக்காட்சி தொடரின் புதிய அத்தியாயம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  இந்தத் தொடர் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மதியம் ஒரு மணிக்கும், சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.  சனிக்கிழமைகளில் காலை 11 மணியிலிருந்து ஸ்வராஜ் தொலைக்காட்சித் தொடரின் ஒலிச்சித்திரம் அகில இந்திய வானொலியில் இடம்பெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897302

***


(Release ID: 1897436) Visitor Counter : 197