பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 06 FEB 2023 12:00PM by PIB Chennai

துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிர், உடைமைகளை இழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

துருக்கி அதிபரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:  “துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிர்களையும், உடைமைகளையும் இழந்தது வேதனை அளிக்கிறது.  கவலையடைந்துள்ள குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.  இந்த துயரமான தருணத்தில் துருக்கி மக்களுக்கு இந்தியா உறுதிணையாக இருப்பதோடு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது”.

***

(Release ID: 1896541)

SMB/IR/RJ/RR


(Release ID: 1896553) Visitor Counter : 182