நிதி அமைச்சகம்

157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும்

Posted On: 01 FEB 2023 1:31PM by PIB Chennai

அமிர்தகாலம் மற்றும் சுதந்திர இந்தியாவின் நூறாண்டு கால தொலை நோக்கு வரிசையில், 2024-ம் ஆண்டிலிருந்து நிறுவப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன், 157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் இன்று 2023-24-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது, மத்திய நிதிமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மருத்துவத்துறை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஆராய்ச்சிகளை மேம்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தனியார் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐசிஎம்ஆர் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். மருந்து உற்பத்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, திறன் மேம்பாட்டு மையம் மூலம் புதிய திட்டம் ஏற்படுத்தப்படும் என்றும், மத்திய நிதிமைச்சர் அறிவித்தார்.

குறிப்பிட்ட முன்னுரிமை பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் முதலீடு செய்ய தொழில் துறையை  நாங்கள் ஊக்கப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

***

 (Release ID: 1895309)

IR/RS/RR(Release ID: 1895684) Visitor Counter : 195