நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அமிர்த தலைமுறையின் கனவுகள் நனவாக உதவி செய்யவும் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது

Posted On: 01 FEB 2023 1:22PM by PIB Chennai

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அமிர்த தலைமுறையின் கனவுகள் நனவாக உதவி செய்யவும் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2023-24 உரையில் தெரிவித்துள்ளார். திறன் மேம்பாட்டில், கவனம் செலுத்துதல், பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தி பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதல் வணிக வாய்ப்புகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றுக்கு இதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

 

அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் வழங்க பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம் 4.0 தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இந்தத் திட்டம் பணியிடத்தில் பயிற்சி, தொழில்துறை பங்களிப்பு, தொழில்துறைக்குத் தேவையான பாடவகுப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று அவர் கூறினார். 

 

இளைஞர்களுக்கு சர்வதேச வாய்ப்புகள் கிடைக்கும்  வகையில் திறன் உருவாக்க பல்வேறு மாநிலங்களில் 30 திறன் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும் என்றும் திருமதி சீதாராமன் தெரிவித்தார்.

 

அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்க இந்திய தேசிய தொழில்பழகுநர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நேரடி பயன் பரிமாற்றம் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

***

(Release ID: 1895304)

SMB/KPG/RR


(Release ID: 1895677) Visitor Counter : 272