நிதி அமைச்சகம்
வங்கி நிர்வாகத்தை மேம்படுத்தவும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் வங்கி முறைப்படுத்தல் சட்டம், வங்கி நிறுவனங்கள் சட்டம், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் ஆகியவற்றின் திருத்தங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது
Posted On:
01 FEB 2023 1:09PM by PIB Chennai
நிதித்துறையில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மற்றும் புதுமையான தொழில்நுட்பப் பயன்பாடு, இந்திய நிதிச்சந்தைகளை வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை மேலும் வலுவானதாக்க மத்திய பட்ஜெட் 2023-24 யோசனைகளைத் தெரிவித்துள்ளது. இதற்காக வங்கி நிர்வாகத்தை மேம்படுத்தவும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் வங்கி முறைப்படுத்தல் சட்டம், வங்கி நிறுவனங்கள் சட்டம், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் ஆகியவற்றின் திருத்தங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது தெரித்தார்.
முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் மூலம், உரிமை கோரப்படாத பங்குகளையும், வழங்கப்படாத ஈவுகளையும் முதலீட்டாளர்கள் மறு உரிமை கோர ஒருங்கிணைக்கப்பட்ட ஐடி இணையப்பக்கத்தை உருவாக்கும் உத்தேசம் உள்ளதாக நிதி அமைச்சர் கூறினார்.
அமிர்தகால விடுதலைப் பெருவிழா நினைவாக ஒருமுறை மட்டும் செலுத்தப்படும் புதிய சிறிய சேமிப்பு திட்டம், மகளிர் சேமிப்பு பத்திரம் 2 வருட காலத்திற்கு மார்ச் 2025 வரை வழங்கப்படும். இதன் மூலம் மகளிர் அல்லது பெண் குழந்தைகள் பெயரில் 2 வருட காலங்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். பகுதி அளவு தொகை திரும்பப் பெறக்கூடிய வசதியுடன் 7.5 சதவிகித வட்டி அளிக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டு தொகை 15 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. மாதாந்திர வருமான கணக்கு திட்டத்திற்கான அதிகபட்ச முதலீட்டு வரைமுறை 4.5 லட்ச ரூபாயில் இருந்து 9 லட்சம் ரூபாயாக ஒரு நபர் கணக்கிற்கு அதிகரிக்கப்படும். கூட்டு கணக்குகளுக்கு 9 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
-----
(Release ID: 1895295)
SMB/KPG/RR
(Release ID: 1895668)
Visitor Counter : 432