நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமிர்த காலத்தில் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மற்றும் அறிவு அடிப்படையிலான நடைமுறைகள் மூலம் சீர்திருத்தங்கள் குறித்த பலதுறை கவனிப்பை நிதியமைச்சர் முன்வைத்துள்ளார்

Posted On: 01 FEB 2023 1:03PM by PIB Chennai

அரசின் சப்தரிஷி எனும் 7 முன்னுரிமைகளின்  ஒரு பகுதியாக அமிர்த காலத்தில் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மற்றும் அறிவு அடிப்படையிலான நடைமுறைகள் மூலம் சீர்திருத்தங்கள் குறித்த பலதுறை கவனிப்பை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் 2022-23-ஐ தாக்கல் செய்தபோது நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ளார்

விவசாயிகளை மையப்படுத்திய டிஜிட்டல் பொது கட்டமைப்பு என்பது திறந்தநிலை ஆதாரமாகவும், திறந்தநிலை தரமாகவும்,  ஒருங்கிணைந்து செயல்படுத்தி பொது நன்மையாகவும் இருக்கும் என்று அவர் கூறினார். பயிர் திட்டமிடுதல், வேளாண் இடுபொருள்கள் கிடைப்பதை மேம்படுத்துதல், கடன், காப்பீடு, பயிர் மதிப்பீட்டிற்கான உதவி, சந்தை நுண்ணறிவு, வேளாண் தொழில்நுட்ப தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்-கள் வளர்ச்சிக்கு உதவி ஆகியவை பற்றிய பொருத்தமான தகவல்கள் வழங்குவதன் மூலம், விவசாயிகளை மையப்படுத்திய தீர்வாக இது இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் ஒரு பகுதியாக பல்வேறு பிரதேசங்கள், மொழிகள், கலை, இலக்கியங்கள் மற்றும் நிலைகளுக்கு தரமான நூல்கள் கிடைக்கச் செய்வதற்காக சிறார்கள் மற்றும் இளையோருக்கு தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். இவர்களுக்கு பஞ்சாயத்து மற்றும் வார்டு அளவில், நூலகங்களை அமைக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும். தேசிய டிஜிட்டல் நூலக தரவுகள் கிடைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

5-ஜி சேவைகள் பயன்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக பொறியியல் கல்வி நிறுவனங்களில் 100 பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். ஸ்மார்ட் வகுப்பறைகள், சுகாதார கவனிப்பு செயலிகள் உள்ளிட்டவற்றை இந்த சோதனைக் கூடங்கள் மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

டிஜி லாக்கர் அமைக்கப்படுவது எம்எஸ்எம்இ-கள், பெரும் வணிகங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு பயன்படும் என்றும்  இதன் மூலம் தேவைப்படும் போது பல்வேறு நிர்வாகங்கள், வங்கிகள், மற்றும் இதர வணிக நிறுவனங்களுக்கு பாதுகாப்புடன் இணையதளம் மூலம் ஆவணங்களை பரிமாறிக் கொள்ளமுடியும்.

------ 

SMB/KPG/RR


(Release ID: 1895641) Visitor Counter : 205