நிதி அமைச்சகம்

குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீதான தேசிய பேரிடர் தொகுப்பு வரி 16% உயர்வு: பட்ஜெட் 2023-24-ல் முன்மொழிவு

Posted On: 01 FEB 2023 12:46PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2023-24-ஐ இன்று தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தேசிய பேரிடர் தொகுப்பு வரியை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீதான இந்த வரி 16% வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் தொகுப்பு வரி (என்சிசிடி) குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றியமைக்கப்பட்டது.

சிகரெட்டுகள் மீதான தேசிய பேரிடர் தொகுப்பு வரி (02.02.2023 முதல் அமல்)

65 மில்லி மீட்டர் நீளத்திற்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் அல்லாத பிற சிகரெட்டுகள் மீதான வரி (1000 குச்சிகளுக்கு) 200 ரூபாயிலிருந்து 230 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

65 மில்லி மீட்டர் நீளத்திற்கு அதிகமான, ஆனால் 70 மில்லி மீட்டர் நீளத்திற்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் அல்லாத பிற சிகரெட்டுகள் மீதான வரி 1000 குச்சிகளுக்கு 250 ரூபாயிலிருந்து 290 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

65 மில்லி மீட்டருக்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் 1000 குச்சிகளுக்கு 440 ரூபாயிலிருந்து 510 ரூபாயாக வரி உயர்த்தப்படுகிறது.

65 மில்லி மீட்டருக்கு அதிகமான, அதே சமயம் 70 மில்லி மீட்டருக்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் மீதான வரி 440 ரூபாயிலிருந்து 510 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

70 மில்லி மீட்டருக்கு அதிகமான, அதே சமயம் 75 மில்லி மீட்டருக்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் 1000 குச்சிகளுக்கு 545 ரூபாயிலிருந்து 630 ரூபாயாக வரி உயர்த்தப்படுகிறது.

பிற சிகரெட்டுகளுக்கு 735 ரூபாயிலிருந்து 850 ரூபாயாகவும், புகையிலை மாற்று சிகரெட்டுகளுக்கு 600 ரூபாயிலிருந்து 690 ரூபாயாகவும் என்சிசிடி வரிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

***

 

LOK/PLM/RR



(Release ID: 1895319) Visitor Counter : 238