பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பராக்ரம தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 23 JAN 2023 9:01AM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளான இன்று  கொண்டாடப்படும் பராக்ரம தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பராக்ரம தினமான இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மரியாதை செலுத்துவதோடு இந்திய வரலாற்றில் அவர் அளித்த ஈடு இணையில்லா பங்களிப்பை நினைவுகூர்கிறேன். காலனித்துவ ஆட்சிக்கு  எதிராக அவர் காட்டிய தீவிர எதிர்ப்பினால் அனைவராலும் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். அவரது சிந்தனைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, இந்தியா குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் பணியாற்றுகிறோம்.

***

(Release ID: 1892904)

PKV/RB/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1892926) வருகையாளர் எண்ணிக்கை : 311