பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பிரதமரின் தேசிய சிறார் விருது 2023: ஆறு பிரிவுகளில் ஒப்பற்ற சாதனை புரிந்த 11 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்

Posted On: 22 JAN 2023 10:48AM by PIB Chennai

தலைசிறந்த 11 சிறார்களுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது 2023ஐ விஞ்ஞான் பவனில் நாளை (ஜனவரி 23, 2023)  நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்குவார்.

விருது பெரும் சிறார்ளுடன் ஜனவரி 24 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுவார்.

இதேபோல் ஜனவரி 24 அன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்சிபாரா மகேந்திரபாய் முன்னிலையில் இத்துறையின் அமைச்சர் திருமதி ஸ்ருதி சுபின் இரானி தேசிய சிறார் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் உரையாடுவார்.

அபாரமான சாதனைகளைப் போற்றும் வகையில் பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை மத்திய  அரசு வழங்கி வருகிறது. கலை மற்றும் கலாச்சாரம், வீர தீரம், புதிய கண்டுபிடிப்பு, அறிவுசார் கல்வி, சமூக சேவை, விளையாட்டு ஆகிய 6 பிரிவுகளில் 5-18 வயது வரையிலான தலைசிறந்த சிறார்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.  ஒவ்வொருவருக்கும் தலா ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

கலை மற்றும் கலாச்சாரம் (4), வீரம் (1), புதிய கண்டுபிடிப்பு (2), சமூக சேவை (1) விளையாட்டு (3) ஆகிய பிரிவுகளில் நாடு முழுவதிலும் இருந்து 11 சிறார்களுக்கு இந்த ஆண்டு பிரதமரின் தேசிய சிறார் விருது வழங்கப்பட உள்ளது.

*****

 

SMB / BR / DL



(Release ID: 1892830) Visitor Counter : 226