சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதலாவது ஜி20 சுகாதார பணிக்குழுக் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 18 முதல் 20 வரை நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 16 JAN 2023 2:16PM by PIB Chennai

ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது  ஜி20 சுகாதார பணிக்குழுக் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 18 முதல் 20 வரை நடைபெறுகிறது.

ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் சுகாதார அமைப்பு நான்கு சுகாதார பணிக்குழுக் கூட்டங்கள், சுகாதார அமைச்சர்கள் நிலையிலான  ஒரு கூட்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  இந்தக் கூட்டங்கள் திருவனந்தபுரம் (கேரளா), கோவா, ஹைதராபாத் (தெலங்கானா), காந்திநகர் (குஜராத்) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளன.

மருத்துவ பயணம் மற்றும் டிஜிட்டல் சுகாதாரம்; மருந்துகளின் கூட்டு ஆராய்ச்சி குறித்த பயிலரங்கு, நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பூசிகள், பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையம் ஆகியவை குறித்து விவாதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 2023, ஜனவரி 18 முதல் 20 வரை நடைபெற உள்ள முதலாவது சுகாதாரப் பணிக்குழுக் கூட்டத்திற்கு இடையே மருத்துவப் பயணம் குறித்த கூட்டம் நடைபெற உள்ளது.

---------------

 (Release ID: 1891547)  

SG/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1891561) आगंतुक पटल : 300
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Telugu , Malayalam