பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாஹுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு
இடுகை இடப்பட்ட நாள்:
11 JAN 2023 6:22PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாஹுவுடன் தொலைபேசியில் இன்று பேச்சு நடத்தினார்.
திரு நேதன்யாஹு, இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கும் அவரது பதவிக் காலம் வெற்றிகரமாக அமையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
அண்மைக் கால ஆண்டுகளில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான உத்தி ரீதியான கூட்டு செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். பல்வேறு துறைகளில் உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இஸ்ரேல் பிரதமர் திரு நேதன்யாஹுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
------
TV/PLM/RS/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 1890493)
வருகையாளர் எண்ணிக்கை : 288
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam