மத்திய அமைச்சரவை
ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் ராணுவத்தின் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் 2019 ஜூலை 1 முதல் திருத்தி அமைக்கப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
23 DEC 2022 8:39PM by PIB Chennai
ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் ராணுவத்தின் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் 2019 ஜூலை 1 முதல் திருத்தி அமைக்கப்படுவதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு முந்தையகால ஓய்வூதியதாரர்களுக்கு 2018 ஆம் ஆண்டில் அதே பதவி மற்றும் அதே சேவைக் காலத்தில் இருந்த ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியத்தின் சராசரி அடிப்படையில் மறு நிர்ணயம் செய்யப்படும்.
பயனாளிகள்
2019 ஜூன் 30 வரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் (2014 ஜூலை 1 அன்று முன்கூட்டியே ஓய்வு பெற்றவர்கள் நீங்கலாக) இந்த திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வருவார்கள். 4.52 லட்சம் புதிய பயனாளிகள் உட்பட ராணுவத்தின் ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்கள் என 25.13 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைவார்கள். சராசரிக்கும் கூடுதலாக ஓய்வூதியம் பெறுவோர் நலன் பாதுகாக்கப்படும். இந்தப் பயன் போரில் இறந்த வீரர்களின் மனைவியர் ஊனமுற்ற ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் நீடிக்கப்படும்.
நிலுவைத் தொகை நான்கு அரையாண்டு தவணை முறைகளில் வழங்கப்படும். இருப்பினும், சிறப்பு மற்றும் தளர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் தீரச்செயல் விருது பெற்றவர்களுக்கும் ஒரே தவணையில் நிலுவைத் தொகை வழங்கப்படும்.
செலவினம்
31 சதவீத அகவிலைப்படி நிவாரணத்துடன் சேர்த்து திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை அமலாக்குவதற்கு ஆண்டுக்கு ரூ. 8,450 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஜூலை 1 முதல் 2021 ஜூன் 30 வரை 17 % அகவிலைப்படி நிவாரணம், 2021 ஜூலை 1 முதல் 2021 டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கு 31% அகவிலைப்படி நிவாரணம்
என்பதுடன் 2019 ஜூலை 1 முதல் 2021 டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கான நிலுவைத்தொகை ரூ. 19,316 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
3 7 தொகை அகவிலைப்படி நிவாரணத்தையும் சேர்த்து 2019 ஜூலை 1 முதல் 2022 டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கான நிலுவைத்தொகை ரூ. 23,638 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தச் செலவு ஒரு பதவி ஒரு ஓய்வூதியத்தின் தற்போதைய கணக்கை விட கூடுதல் செலவாகும்.
**************
SM/SMB/DL
(Release ID: 1886256)
Visitor Counter : 1045
Read this release in:
Odia
,
Assamese
,
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Malayalam