சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவை மூலம் மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் விரைவாகப் பதிவுசெய்ய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் உதவுகிறது

Posted On: 21 DEC 2022 12:04PM by PIB Chennai

தேசிய சுகாதார ஆணையம்  தனது முதன்மைத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ்   ஸ்கேன் மற்றும் பகிர்வு செயல்பாடு மூலம் புறநோயாளிகள் பிரிவில் விரைவான பதிவு சேவையை நோயாளிகளுக்கு வழங்குகிறது. 2022 அக்டோபரில் புதுதில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொடங்கப்பட்ட இந்த சேவை, தற்போது இந்தியாவின் 18 மாநிலங்களில்  200+ மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தொடங்கப்பட்ட 75 நாட்களுக்குள், ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவையானது, புறநோயாளிகள் பிரிவு  ஆலோசனைகளுக்கு உடனடிப்  பதிவை சாத்தியமாக்கி  ஏற்கெனவே 1 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் தங்களின் நேரத்தையும் முயற்சியையும் சேமிக்க உதவியுள்ளது. நோயாளிகளுக்கு சிறந்த சேவை வழங்குவதற்கான  இந்த வசதியைப் பயன்படுத்துவதில் கர்நாடகா, தில்லி, உத்தரப்பிரதேசம் ஆகியவை முன்னணி மாநிலங்களாக உள்ளன.

நோயாளிகள் தாங்கள் பங்கேற்கும் மருத்துவமனை/சுகாதார மையத்தின்  தனிதத்துவ  க்யூஆர்  குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்கள் விருப்பப்படி எந்த ஒரு சுகாதார செயலியிலும்  (ஏபிஎச்ஏ செயலி, ஆரோக்கியசேது செயலி, ஏக்தாகேர், பஜாஜ் ஹெல்த், பே டிஎம்  போன்றவை)  அவர்களின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கின் சுயவிவரத்தைப் பகிர இந்த சேவை அனுமதிக்கிறது. நோயாளியின் பெயர், பாதுகாவலரின் பெயர், வயது, பாலினம், முகவரி, மொபைல் எண் போன்ற மக்கள்தொகை விவரங்கள் அவர்களின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கிலிருந்து நேரடியாக மருத்துவமனையின் மேலாண்மைத் தகவல் அமைப்புடன் பகிரப்பட்டு டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகிறது. அதன்பின்,  நோயாளி கவுண்டருக்கு சென்று எளிதாகத் தனது புறநோயாளி  சீட்டைப் பெற்று மருத்துவரை சந்திக்க செல்லலாம்.

ஸ்கேன் மற்றும் பகிர்வு  சேவை மூலம் புறநோயாளிகள் பிரிவு டோக்கன் உருவாக்கம் குறித்த புதுப்பிப்புகள் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் பொதுத் தகவல்பலகையில் உள்ள ‘ஹெல்த் ஃபெசிலிட்டி டோக்கன் ஜெனரேட்டட்’  டேபில்   கிடைக்கும் – https://dashboard.abdm.gov.in/abdm/

தேசிய சுகாதார இயக்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885310

**************



(Release ID: 1885370) Visitor Counter : 158