பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2022க்கான மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்த்தல் மற்றும் கண்காணிப்பு அமைப்பின் ஆண்டறிக்கையை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்
Posted On:
20 DEC 2022 1:03PM by PIB Chennai
2022க்கான மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்த்தல் மற்றும் கண்காணிப்பு அமைப்பின் ஆண்டறிக்கையை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); ; பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்
இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
2022ல் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் 18,19,104 குறைகள் வரப்பெற்றன. இவற்றில் 15,68,097 குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டன. இவற்றிலும் 11,29,642 குறைகள் மத்திய அமைச்சகங்களாலும் 4,38,455 குறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களாலும் பைசல் செய்யப்பட்டன.
2021ல் 32 நாட்களாக இருந்த மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சராசரி பைசல் காலம் 2022ல் 27 நாட்களாக மேம்பட்டுள்ளது. 1,71,509 மேல்முறையீடுகள் வரப்பெற்றன. இவற்றில் 80% பைசல் செய்யப்பட்டன. 2022 ஜூலை – நவம்பர் காலத்தில் பிஎஸ்என்எல்-ன் அழைப்பு மையங்களால் நடத்தப்பட்ட கருத்துபெறுதல் தரவரிசையில் 57,000க்கும் அதிகமான குறைதீர்த்தல்களில் மிகச்சிறப்பு, மிக நன்று என குடிமக்களிடமிருந்து கருத்துக்கள் வந்துள்ளன.
2022 ஆகஸ்ட்டில் 1.14 லட்சம், செப்டம்பரில் 1.17 லட்சம், அக்டோபரில் 1.19 லட்சம், நவம்பரில் 1.08 லட்சம் என அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் குறைகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்த்தல் மற்றும் கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குறைகள் தீர்க்கப்படுவது இதுவே முதன்முறையாகும். மொத்த நிலுவை என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்திய அமைச்சகங்களில் 0.72 லட்சம் எனவும் மாநிலங்களில் 1.75 லட்சம் எனவும் முறையீடுகள் குறைந்துள்ளன.
பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதில் பொறுப்புத்தன்மை, மேல்முறையீட்டு வசதி, நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை கட்டாயம் , பின்னூட்டத்திற்கான அழைப்பு மையம் ஆகியவற்றைத் துறை செயல்படுத்தியுள்ளதை, 2022 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, பணியாளர் நலன், மக்கள் குறைதீர்த்தல் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 121வது அறிக்கை பாராட்டியுள்ளது. இந்த அமைப்பின் இணையப்பக்கம் அட்டவணைப் பட்டியலில் உள்ள அனைத்து மொழிகளிலும் கிடைப்பதை உறுதிசெய்துள்ளதையும் இந்தக்குழு பாராட்டியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885015
**************
AP/SMB/KRS
(Release ID: 1885091)
Visitor Counter : 166