குடியரசுத் தலைவர் செயலகம்

தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 14 DEC 2022 2:25PM by PIB Chennai

தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி புதுதில்லியில் இன்று  (14.12.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், தேசிய எரிசக்தித் திறன் புதுமை கண்டுபிடிப்பு விருதுகள் மற்றும் தேசிய ஓவியப் போட்டிக்கான பரிசுகள் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். அத்துடன் ஈவி-யாத்ரா என்ற இணையதளத்தையும் அவர் தொடங்கிவைத்தார். எரிசக்தி திறன் அமைப்பு வடிவமைத்துள்ள இந்த இணையதளத்தின் மூலம் அருகேயுள்ள மின்னணு வாகனங்களுக்கான மின்னேற்றி நிலையங்களை கண்டறிய முடியும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், எதிர்காலத் தலைமுறையினர் மாசு இல்லாத காற்றை சுவாசிப்பதையும் ஆரோக்கியமாக நலமுடன் வாழ்வதையும், உறுதிசெய்வது நமது முதன்மையான குறிக்கோள் என்று தெரிவித்தார். தூய்மையானக் காற்றை சுவாசிப்பது மனிதனின் அடிப்படை உரிமை என்றும் அவர் கூறினார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் பல்வேறு மனித உரிமைகளை நாம் பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் போது  எரிசக்தி சேமிப்பு என்பது உலகளாவிய மற்றும் நாட்டின் முக்கியத்துவம் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

 

**************

AP/IR/AG/KPG



(Release ID: 1883419) Visitor Counter : 140