தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
எம் எஸ் ஓ-க்கள் கோரும் பிளாட்பார்ம் சேவைகளுக்கான வழிகாட்டும் விதிமுறைகளை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது
Posted On:
30 NOV 2022 3:09PM by PIB Chennai
எம் எஸ் ஓ-க்கள் தங்களின் நிகழ்ச்சி சேவைகளை சந்தாதாரர்களுக்கு நேரடியாக அல்லது ஒன்றுக்கும் அதிகமான உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்ப 1994 ஆம் ஆண்டின் கேபிள் டிவி நெட்வொர்க்ஸ் விதிகள் அனுமதிக்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் பிளாட்பார்ம் சர்வீஸ் (பிஎஸ்) என குறிப்பிடப்படுகிறது. எம்எஸ்ஓ-க்களால் உள்ளூர் நிலையில் உருவாக்கப்படும் பிரத்யேக நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்.
இந்தியாவில் எம்எஸ்ஓ-க்கள் கோரும் பிளாட்பார்ம் சேவைகளுக்கான வழிகாட்டும் விதிமுறைகளை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 30.11.2022 அன்று வெளியிட்டுள்ளது. இது, பிளாட்பார்ம் சர்வீஸ் என்பதற்கான விளக்கத்தையும், இதனை எம்எஸ்ஓ-க்கள் நடத்துவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.
- எம்எஸ்ஓ-க்களின் பிஎஸ் அலைவரிசைகளுக்கு ஆன்லைன் மூலம் எளிதாக பதிவு செய்யலாம். ஒவ்வொரு அலைவரிசைக்கும் ரூ.1,000 கட்டணம் ஆகும். இதற்கான இணைய பக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
- கம்பெனிகள் என பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே உள்ளூர் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. கம்பெனி என பதிவு செய்யாத ஆனால் உள்ளூர் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை வழங்க விரும்பும் எம்எஸ்ஓ-க்கள் தங்களை கம்பெனியாக மாற்றிக் கொள்ள 3 மாதத்திற்குள் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு விண்ணப்பம் கட்டாயமாகும்.
- ஒவ்வொரு ஆபரேட்டருக்கும் அனுமதிக்கப்படும் பிஎஸ் அலைவரிசைகளின் எண்ணிக்கை மொத்த அலைவரிசைகளில் 5 சதவீதமாக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சந்தாதாரர்களின் உள்ளூர் மொழி மற்றும் கலாச்சார சேவைக்கேற்ப பிஎஸ் அலைவரிசைகளின் எண்ணிக்கை மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் கணக்கிடப்படும். மேலும், ஒவ்வொரு மாவட்ட அளவிலும் இரண்டு பிஎஸ் அலைவரிசைகளுக்கு கூடுதலாக அனுமதி வழங்கப்படும்.
- பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளில் இருந்து மாறுபடுத்தி காட்டும் வகையில் ‘பிளாட்பார்ம் சர்வீசஸ்’ என்ற தலைப்பை அனைத்து பிஎஸ் அலைவரிசைகளும் கொண்டிருக்க வேண்டும்.
- பிளாட்பார்ம் சர்வீசஸ் உள்ளடக்கம் அதற்கென்றே தனியாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதர விநியோக பிளாட்பார்ம் ஆபரேட்டர் எவரிடம் இருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பகிரப்பட்டதாக இருக்கக்கூடாது. இருப்பினும், கோயில்கள், குருத்வாராக்கள் போன்ற சமயம் சார்ந்த இடங்களில் இருந்து நேரலை நிகழ்வுகள் பகிர்வது அனுமதிக்கப்படும்.
- பிஎஸ்-ஆவதற்கு கோருகின்ற எம்எஸ்ஓ-க்கள் பதிவு செய்யப்பட்ட அனைத்து பிஎஸ் அலைவரிசை நிகழ்ச்சிகளையும் 90 நாட்களுக்கு பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.
- உள்ளடக்கம் பற்றிய புகார் எழுந்தால், அதன்மீது 1995 ஆம் ஆண்டில் சிடிஎன் சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாலும் மாநில மற்றும் மாவட்ட கண்காணிப்பு குழுவினராலும் ஆய்வு நடத்தப்படும்.
- 2022 நவம்பர் 30 அன்று வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளுக்கு எம்எஸ்ஓ-க்கள் இணக்கம் தெரிவிக்க 12 மாத அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.
**********
SM/SMB/PK/KRS
(Release ID: 1880034)
Visitor Counter : 233