பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் முதல் தனியார் செலுத்து வாகனமான விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் இன்-ஸ்பேஸ் அமைப்புகளுக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
18 NOV 2022 5:26PM by PIB Chennai
இந்தியாவின் முதலாவது செலுத்து வாகனமான விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமான இன்-ஸ்பேஸ் ஆகிய அமைப்புகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட விக்ரம்-எஸ் செலுத்து வாகனம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டிருப்பது இந்தியாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகும். இது இந்தியாவின் தனியார் விண்வெளி துறை பயணத்தில் முக்கிய மைல்கல் ஆகும். இந்த சாதனையை படைத்துள்ள இஸ்ரோ மற்றும் இன்-ஸ்பேஸ் அமைப்புகளுக்கு வாழ்த்துகள்”.
“2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை முழுமையாக பயன்படுத்தி கொண்ட நமது இளைஞர்களின் மகத்தான திறமைக்கு இந்த சாதனை சான்றாக திகழ்கிறது”.
**************
MSV/PLM/KG/KRS
(Release ID: 1877056)
(Release ID: 1877088)
Visitor Counter : 253
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam