பிரதமர் அலுவலகம்

பாலியில் ஜி-20 மாநாட்டின் போது சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 16 NOV 2022 1:45PM by PIB Chennai

பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டின் பொது பிரதமர் திரு நரேந்திர மோடி சிங்கப்பூர் பிரதமர் மேதகு திரு. லீ சியென் லூங்கை இன்று சந்தித்தார். கடந்த ஆண்டு ரோமில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் லீயை சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

செப்டம்பர் 2022 இல் புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேஜை கூட்டத்தின் தொடக்க அமர்வு உட்பட இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் வழக்கமான உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் நிறுவன தொடர்புகள் குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான இணைப்புகளை, குறிப்பாக ஃபின்டெக் (நிதி சார் தொழில்நுட்பம்), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில், மேலும் விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். பசுமைப் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்யவும், இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வழிமுறை, சொத்துக்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டம் மற்றும் விரைவு சக்தி திட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமாறு சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இரு தலைவர்களும் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய மேம்பாடு குறித்த தங்களின் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்தியாவின் கிழக்கை உற்று நோக்குங்கள் கொள்கையில் சிங்கப்பூரின் பங்கையும், 2021-2024 வரையிலான ஆசியான்-இந்திய உறவுகளின் ஒருங்கிணைப்பாளராக சிங்கப்பூரின் பங்கையும் பிரதமர் மோடி பாராட்டினார். இந்தியா-ஆசியான் பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் விருப்பத்தை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

**************

(Release ID: 1876384)

 

MSV/SMB/KRS



(Release ID: 1876432) Visitor Counter : 144