பிரதமர் அலுவலகம்
மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2022 9:28AM by PIB Chennai
மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என திரு.மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
“மிசோரமின் கல்குவாரியில் ஏற்பட்ட துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் - பிரதமர்”
**************
PKV/KG/RR
(Release ID: 1876308)
(வெளியீட்டு அடையாள எண்: 1876316)
வருகையாளர் எண்ணிக்கை : 229
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam