சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சிஓபி 27-ல் தேசிய அறிக்கையை இந்தியா வெளியிட்டது
Posted On:
15 NOV 2022 4:11PM by PIB Chennai
சிஓபி 27-ல் இந்தியாவின் தேசிய அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று வெளியிட்டார்.
மேன்மை தாங்கியவர்களே,
நமது விருந்தினர்களுக்கும், சிஓபி-27-ன் தலைமைக்கும், பெருமுயற்சிகள் மற்றும் கனிவான விருந்தோம்பலை அளித்துள்ள எகிப்து அராப் குடியரசுக்கும், முதற்கண் எங்களின் நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓராண்டுக்கு முன் கிளாஸ்கோவில் அறிவியலின் அறைகூவலை ஏற்று முக்கியமான உறுதிமொழிகளை ஏற்க முன்வந்தோம்.
இந்த ஆண்டு, ஷார்ம்-எல்-ஷேக்கில் நமது செயல்பாட்டுத் தருணமாக உள்ளது. இதனை அமலாக்கத்தின் சிஓபி என எகிப்து தலைமை மிகச் சரியாகவே வடிவமைத்துள்ளது.
மேன்மை தாங்கியவர்களே,
எங்களின் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி, 2070-க்குள் ஒட்டுமொத்தமாக கரியமில வாயு வெளியேற்றத்தை தடுப்பது இந்தியாவின் நோக்கம் என்று கிளாஸ்கோவில் அறிவித்தார். ஓராண்டுக்குள் குறைந்த அளவு கரியமில வாயு வெளியேற்றத்திற்கான நீண்டகால உத்தியை இந்தியா சமர்ப்பித்திருப்பது, முக்கியமான பொருளாதார துறைகளில், குறைந்த அளவு கரியமில வாயு வெளியேற்றத்திற்கான பணிகளை கண்டிருப்பதைக் குறிக்கிறது.
2030 பருவநிலை இலக்குகளின் அதிகரிக்கப்பட்ட லட்சியத்திற்கான அழைப்புக்கு மதிப்பளித்து இந்தியா 2022 ஆகஸ்டில் தேசிய தீர்மானகரமான பங்களிப்பை காலத்திற்கேற்ப மாற்றியுள்ளது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி, மின்சார போக்குவரத்து, எத்தனால் கலந்த எரிபொருள்கள், பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய மாற்று எரிசக்தி முன்முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
இந்தியாவால் தொடங்கப்பட்டு பேணப்பட்டு வருகின்ற சர்வதேச சூரிய எரிசக்திக் கூட்டணி, பேரிடரை தாங்கவல்ல அடிப்படைக் கட்டமைப்பு கூட்டணி போன்றவற்றின் செயல்பாடு மற்றும் தீர்வுகள் அடிப்படையிலான ஒருங்கிணைப்புகள் மூலம் வலுவான சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்க நாங்கள் கோருகிறோம். உலகளாவிய நன்மைக்கு கூட்டுச் செயல்பாடு என்ற எங்களின் நெறிமுறைக்கு இது சான்றாக உள்ளது.
1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின், ஒட்டுமொத்த கரியமில வாயு வெளியேற்றம் உலக பங்கில் 4 சதவீதத்திற்கும் குறைவாகும். இதில் வருடாந்தர தனிநபர் பங்கு உலகளாவிய சராசரியில், மூன்றில் ஒரு பங்காகும். இருப்பினும் இது தொடர்பான கடினமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
பாதுகாப்பான புவிக்கோளம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் மையப் பகுதியாக லைஃப்ஸ்டைல் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) என்ற ஒரு சொல் மந்திரம் உள்ளது. இதனை சிஓபி-26-ன் எங்களது தேசிய அறிக்கையில், பிரதமர் மோடி முன்வைத்தார்.
இந்த லைஃப் இயக்கம், 2022 அக்டோபர் 20 அன்று ஐநா தலைமைச் செயலாளர் மேன்மை தாங்கிய ஆன்டனியோ குட்ரஸ் முன்னிலையில், பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. சிந்தனையற்ற அழிவுக்குரிய நுகர்வு என்பதிலிருந்து சிந்தனை மிகுந்த தீர்மானகரமான பயன்பாடு என்ற மாற்றத்தை ஏற்படுத்துவது உலகிற்கு உடனடித் தேவையாகும். நாம் இந்தப் புவிக்கோளின் காவலர்கள். ஆதார வளங்களை அதிகபட்சம் பயன்படுத்தி, கழிவுகளைக் குறைக்கின்ற நீடித்த வாழ்க்கை முறை மூலம் இதனை நாம் பாதுகாக்க வேண்டும்.
உலகின் மிகுந்த செல்வாக்கு மிக்க ஜனநாயகம் மற்றும் வளர்ந்து வரும் துடிப்புமிக்க பொருளாதாரம் என்ற முறையில், உதாரணமாக இருந்து தலைமை ஏற்க விரும்பும் இந்தியா, தனிநபர், குடும்பம் சமூக அடிப்படையிலான செயல்பாடுகளுக்கு லைஃப் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்குமாறு உலக சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
மேன்மை தாங்கியவர்களே,
ஒரே பூமி, ஒரே குடும்பம் , ஒரே எதிர்காலம் என்ற குறிக்கோளுடன் 2023-க்கான ஜி-20 அமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுள்ளது. மனிதகுலத்திற்கு பாதுகாப்பான புவிக்கோளை நோக்கிய நமது பயணம் எந்தவொரு நாடும் தனியாக செயல்படமுடியாது என்பதைக் காட்டுகிறது. சமத்துவம் மற்றும் பருவநிலை நீதியை நமது வழிகாட்டும் கோட்பாடுகளாகக் கொண்டு இந்தக் கூட்டுப்பயணம் இருக்கட்டும்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் இந்த உலகத்தை ஒரே குடும்பம் என்பதாக ஒன்றுபடுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
**************
MSV/SMB/KPG/IDS
(Release ID: 1876161)
Visitor Counter : 259