பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கிவைத்து பிரதமர் உரை

Posted On: 12 NOV 2022 8:18PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

 

நண்பர்களே!

 

தெலங்கானா மாநிலத்துக்காக ரூ.10,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்படுகிறது  அல்லது புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இன்று தொடங்கப்படும் இந்த திட்டங்கள் விவசாயம் மற்றும் தொழில்துறை இரண்டையுமே வலுப்படுத்தும்.

உர தொழிற்சாலையுடன் புதிய ரயில் பாதை, ஒரு நெடுஞ்சாலை மற்றும் தொழிற்சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் புதிய வேலை வாய்ப்புகளை  உருவாக்குவதுடன் தெலங்கானாவில் உள்ள சாதாரண மக்களின் வாழ்வை  மேம்படுத்தி  வாழ்க்கை முறையை எளிதாக்கும்.

நண்பர்களே!

கடந்த இரண்டரை ஆண்டுகளாக  ஒருபறும் கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதில் உலகம் முழுவதும் போராடி வந்த நிலையில், மறுபுறம் போர் மற்றும் ராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது எல்லாவற்றுக்கும் மத்தியில், இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வருவதாக நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.   30 ஆண்டுகளுக்கு முன்பாக, 90 களில் இருந்ததைப்போன்ற வளர்ச்சிக்கு இணையாக வரும் ஆண்டுகளில் வளர்ச்சி இருக்கும். இந்தக்கணிப்புக்கு முக்கிய காரணம் கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள மாற்றமாகும். கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா தனது செயல்முறை அணுகுமுறையை மாற்றியுள்ளது. இந்த 8 ஆண்டுகளில் அரசின் சிந்தனை மற்றும் அணுகுமுறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.’’ உள்கட்டமைப்பு, அரசு நடைமுறைகள், எளிதாக தொழில் புரிதல் ஆகியவற்றில் இதனை கண்கூடாக பார்க்கலாம்.

சகோதர, சகோதரிகளே!

நாட்டின் வளர்ச்சி என்பது வருடத்தில் அனைத்து  நாட்களும் எல்லா நேரங்களிலும் மேற்கொள்ளப்படும் இயக்கமாகவே நமக்கு உள்ளது. ஒரு திட்டம் தொடங்கப்படும் போது அடுத்தடுத்து பல புதிய திட்டங்களுக்கான பணிகளையும் நாம் தொடங்குகிறோம்.    தற்போது மத்திய அரசு இந்த முயற்சிகளில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.   உரத்துறையும் தற்போது சிறந்த வளர்ச்சியை காண்கிறது. முந்தைய காலங்களில் இத்துறையில் சிக்கல்கள் இருந்தன. வெளிநாடுகளில் இருந்து உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. விவசாயிகள் யூரியாவுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. 2014-ம் ஆண்டுக்கு முன்பாக விவசாயிகள் இந்த பிரச்சனையை ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வந்தனர்.

நண்பர்களே!

2014-ம் ஆண்டுக்கு பிறகு யூரியாவில் வேம்பு பூசப்படுவதை மத்திய அரசு உறுதி செய்தது. யூரியாவின் கறுப்பு சந்தைக்கு முடிவு கட்டப்பட்டது. மண்வள அட்டை திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம்  தேவையற்ற யூரியா பயன்பாடும் தவிர்க்கப்பட்டது. மேலும் மண்ணின் தன்மை குறித்தும் விவசாயிகள் புரிந்து கொள்ளத்தொடங்கினர்.

நண்பர்களே!

யூரியா உற்பத்தியில் சுயசார்பை அடைய மிகப்பெரிய செயல் திட்டங்களை நாம் தொடங்கினோம். பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 5 பெரிய உரத் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உர உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ராம குண்டம் உரத் தொழிற்சாலையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த 5 தொழிற்சாலைகளும் செயல்பாட்டுக்கு வரும் போது  கூடுதலாக 60 லட்சம் டன் யூரியாவை நாடு பெறும். இதனால் யூரியா இறக்குமதிக்கான செலவு குறைவதுடன், விவசாயிகள் எளிதில் யூரியாவை பெற முடியும்.

சகோதர, சகோதரிகளே!

நாட்டின் உரத்துறையை நவீனப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கும் நாம் முக்கியத்துவம் அடைகிறோம். யூரியாவில் நானோ தொழில்நுட்பத்தை நாம் உருவாக்கி உள்ளோம்.

நண்பர்களே!

தற்போதைய உலக சூழலில்  உரத்துறையின் தற்சார்பு அடைவது முக்கியமானது. கொவிட்-19 பாதிப்பு மற்றும் போர் சூழல் காரணமாக உலகம் முழுவதும் உரங்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் நமது நாட்டில் விவசாயிகளின் மீது சுமை ஏற்றக்கூடாது என்பதற்காக  உரங்களின் விலை உயர்த்தப்படவில்லை. 2000 ரூபாய்க்கு  இறக்குமதி செய்யப்படும் ஒரு மூட்டை யூரியாவை விவசாயிகளுக்கு 270 ரூபாய்க்கு வழங்குகிறோம்.  பெருமளவு செலவை அரசு  ஏற்கிறது.

நண்பர்களே!

கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு குறைந்த உரங்களை வழங்க இந்திய அரசு 10 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இந்த ஆண்டு இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்படவுள்ளது.

நண்பர்களே!

 சந்தையில் பல்வேறு விதமான யூரியா கிடைப்பதால் விவசாயிகள்

சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பாரத் யூரியா என்ற ஒரே அடையாளத்தை  கொண்ட யூரியாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.  இதன் தரம் மற்றும் விலை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே!

நம் நாட்டில் மற்றொரு சவால் போக்குவரத்தாகும்.  தற்போது  நாடு இதில் அதிக கவனம் செலுத்துகிறது. நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழித்தடங்கள் போன்றவை விரைவாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.    அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்திற்கேற்ப தெலங்கானா மாநிலத்தை முன்னேற்ற நாங்கள் விரும்புகிறோம்.

நன்றி!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

***

 

MSV/PLM/AG/IDS


(Release ID: 1875761) Visitor Counter : 136