பிரதமர் அலுவலகம்
பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள துறவி கவிஞர் ஸ்ரீ கனகதாசர், மகரிஷி வால்மீகி சிலைகளுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
11 NOV 2022 11:09AM by PIB Chennai
பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள துறவி கவிஞர் ஸ்ரீ கனகதாசர் மற்றும் மகரிஷி வால்மீகி சிலைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீ கனகதாசருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று, கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கனகதாசர் சிலைக்கு நான் மரியாதை செலுத்தினேன். பக்தியின் பாதையை நமக்குக் காட்டியதற்காகவும், கன்னட இலக்கியத்தை வளப்படுத்தியதற்காகவும், சமூக ஒற்றுமைக்கான செய்தியை வழங்கியதற்காகவும் அவருக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’’.
மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தியது குறித்தும் பிரதமர் ட்விட்டரில் பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடியுடன் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் உள்ளிட்டோர் இருந்தனர்.
**************
(Release ID: 1875088)
PKV/SMB/RR
(रिलीज़ आईडी: 1875106)
आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam