பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி-20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளம் வெளியிடப்பட்டது

Posted On: 08 NOV 2022 6:57PM by PIB Chennai

ஜி-20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

இலச்சினை மற்றும் கருப்பொருளின் விளக்கம்

இந்திய தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள நிறங்களான ஆரஞ்ச், வெள்ளை, பச்சை மற்றும் நீல நிறங்களிலிருந்து ஜி-20 இலச்சினை வரையப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய மலரான தாமரையுடன் கூடிய புவிச் சின்னம் சவால்களுக்கு இடையேயான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான இந்தியாவின் புவி சார்ந்த அணுகுமுறையை பூமிச் சின்னம் பிரதிபலிக்கிறது. ஜி-20 இலச்சினைக்கு கீழே எழுதப்பட்டுள்ள “பாரத்” என்ற வார்த்தை தேவநாகிரி முறையில் இடம் பெற்றுள்ளது.

இலச்சினை வடிவமைப்பிற்கான திறந்தவெளி போட்டி மூலம் இது வடிமைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிற்காக 2,000 விண்ணப்பங்கள் மைகவ் இணையதளத்தில் பெறப்பட்டது.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கான கருப்பொருள் – வசுதைவக் குடும்பகம் அல்லது ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் – என்பது மகா உபநிஷத்தின் பழமையான சமஸ்கிருத உரையிலிருந்து எடுக்கப்பட்டது.

ஜி-20 இணையதளம்

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கான இணையதளமான www.g20.in பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது. டிசம்பர் 1, 2022  அன்று ஜி-20 தலைமைத்துவதற்திற்கான இணையதளம் www.g20.org  என்று மாறியுள்ளது. இதில் ஜி-20 குறித்த தகவல்கள், சரக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றிய தகவல்களும் இடம் பெறும். குடிமக்கள், தங்களது கருத்துக்களை பதிவிடுவதற்கான பிரிவும் இந்த இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜி-20 செயலி

இணையதளத்துடன் ஜி-20 இந்தியா என்ற மொபைல் செயலியும் வெளியிடப்பட்டது.

-----

SM/IR/KPG/IDS


(Release ID: 1874671) Visitor Counter : 425