தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தங்கமயில் விருது பெறும் ஆவலுடன் 15 திரைப்படங்கள் உள்ளன

Posted On: 07 NOV 2022 10:37AM by PIB Chennai

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ள 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமயில் விருதுபெறும் ஆவலுடன் 15 திரைப்படங்கள் போட்டியில் இறங்குகின்றன. திரைப்படத் துறையில் அழகுணர்ச்சி மற்றும் அரசியலில் வளர்ந்து வரும் போக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், 12 சர்வதேச திரைப்படங்களும், 3 இந்திய திரைப்படங்களும் இந்த போட்டியில் இடம்பெறும்.

முதன் முறையாக தங்கமயில்  விருது வழங்கப்பட்ட இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இருந்து இந்த விருது ஆசியாவின் திரைப்பட விருதுகளில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் விருதாக உள்ளது. இந்த ஆண்டு போட்டியின் போது, வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடுமையான  பணியை இஸ்ரேல் எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமான நாடவ் லேப்பிட், அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஜின்கோ கோட்டோ, பிரான்ஸ் திரைப்பட தொகுப்பாளர் பாஸ்கல் சவான்ஸ், பிரான்ஸ் ஆவணப்பட தாயரிப்பாளர், திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளரான சேவியர் ஆங்குலோ பார்ட்டன், இந்தியாவின் திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.

இந்த போட்டியில், 1990 வாக்கில் காஷ்மீரிலிருந்து வெளியேறிய காஷ்மீரி பண்டிட்களை மையப்படுத்திய இந்திய திரைப்படமான காஷ்மீர் ஃபைல்ஸ், இந்தியாவின் 3 திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெறுகின்றது. அகால மரணமடைந்த தனது பெற்றொர்களின் உண்மை தன்மை குறித்து கண்டறிவதற்காக வீட்டை விட்டு வெளியேறும்  கிருஷ்ணா என்ற இளம் கல்லூரி மாணவரை மையப்படுத்திய கதையாக இந்த திரைப்படம் உள்ளது.

பிரபல திரைப்பட இயக்குனர் சத்ய ஜித்ரேயின் கதாபாத்திரமான தாரிணி குரோவை அடிப்படையாக கொண்டது ஸ்டோரி டெல்லர் என்ற ஆனந்த் மகாதேவனின் திரைப்படம். இது தங்கமயில் போட்டிப்பிரிவில் இடம்பெற உள்ளது. தாரிணி குரோ தனது பணி ஓய்வுக்கு பின், ஒரு கதை சொல்லியாக மாறிய வித்தியாசமான சூழ்நிலையை அவர்   தாமே உணர்ந்தது பற்றிய கதையம்சத்தை கொண்டது இந்த திரைப்படம். இது பூசன் சர்வதேச திரைப்பட விழா 2022ல் கிம் ஜி- சியோக் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட  படமாகும்.

ராசி அழகப்பனின் ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்ட, இயக்குனர் கமலக்கண்ணனின் குரங்கு பெடல் இந்த போட்டிப்பிரிவில் இடம்பெறுகிறது. தனது தந்தை தனக்கு கற்றுதர முடியாமல் போன மிதிவண்டி சவாரியை கற்றுக்கொள்ள விரும்புகின்ற ஒரு பள்ளி மாணவனின் கதையாகும் இது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் 2012ல் வெளியான மதுபானக் கடை திரைப்படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.

இவை தவிர, 12 சர்வதேச திரைப்படங்களும் தங்கமயில் விருதுபெற போட்டியிடுகின்றன.

 *********

AP/SMB/RS/IDS



(Release ID: 1874301) Visitor Counter : 232