நிதி அமைச்சகம்
வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 7,183.42 கோடி 14 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது
Posted On:
07 NOV 2022 2:17PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் உள்ள செலவினத் துறை வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 7,183.42 கோடியை 14 மாநிலங்களுக்கு இன்று விடுவித்தது. 15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, இந்த மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு ரூ. 86,201 கோடியை வழங்குமாறு 15 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. 12 மாத தவணைகளாக இதனை வழங்க செலவினத்துறை பரிந்துரை அளித்துள்ளது. 2022 நவம்பர் மாதத்தில் 8-ஆவது தவணையுடன் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.57,467.33 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம், அசாம், இமாச்சலப்பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இந்த மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
**************
AP/IR/PK/IDS
(Release ID: 1874270)
Visitor Counter : 121