தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஸாலில், இந்திய மக்கள் தகவலியல் நிறுவனத்தின் வடகிழக்கு மண்டல வளாகக் கட்டடத்தை குடியரசுத்தலைவர் திறந்துவைத்தார்

Posted On: 04 NOV 2022 1:39PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, தமது மிசோரம் பயணத்தின் ஒரு பகுதியாக ஐஸாலில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தகவலியல் நிறுவனத்தின் வடகிழக்கு மண்டலத்திற்கான நிரந்தர கட்டடத்தை இன்று திறந்துவைத்தார். இந்த நிறுவனம் ஆங்கில தகவலியல் மற்றும் டிஜிட்டல் ஊடகம் சார்ந்த முதுகலை பட்டயப் படிப்புகளை  கற்பிக்கும். இது தவிர ஊடகம் மற்றும் தகவலியல் சார்ந்த குறுகிய கால கல்வி படிப்பும் உள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்படும் இந்திய மக்கள் தகவலியல் நிறுவனம் (ஐஐஎம்சி), நாட்டிலேயே தகவலியல் கல்வி நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும். தில்லியில் உள்ள ஐஐஎம்சி நிறுவனத்திற்கு ஒடிசா, மிசோரம், ஜம்மு காஷ்மீர், கேரளா, மகாராஷ்ட்ரா ஆகிய 5 மாநிலங்களில் மண்டல வளாகங்கள் உள்ளன. இந்நிலையில், மிசோரத்தின் ஐஸாலில் அமைக்கப்பட்டுள்ள வடகிழக்கு இந்திய மக்கள் தகவலியல் நிறுவனத்தின் நிரந்தர கட்டடத்தை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று திறந்துவைத்து பேசினார். அப்போது இந்த ஐஐஎம்சி நிறுவனம் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும்  ஊடகம் மற்றும் மக்கள் தகவலியல் கல்வியை கொண்டு செல்லும் பணியை திறம்பட செய்யும் என்று கூறினார்.  இந்த நிறுவனம் ஊடகம் மற்றும் மக்கள் தகவலியலில்  சிறந்து விளங்க விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல பயிற்சிக் கூடமாக திகழும் என நம்புவதாக திருமதி முர்மு தெரிவித்தார்.

 

2011-ஆம் ஆண்டு முதல்  ஐஐஎம்சி-யின் வடகிழக்கு பகுதி வளாகம் மிசோரம் பல்கலைக்கழகத்தின் தற்காலி கட்டடத்தில் இயங்கத் தொடங்கியது. பின்னர்  மிசோரம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட 8 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிரந்தர வளாகக் கட்டடம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. 2015 ஆம் ஆண்டு  தொடங்கிய இந்த கட்டுமானப் பணி 2019ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதில் ஐஐஎம்சி-க்கான நிர்வாகக் கட்டடம், வகுப்பறைகள், மாணவர் விடுதி, ஆசிரியர் குடியிருப்புகள் ஆகியவை தனித்தனியே கட்டப்பட்டுள்ளன.

************** 

SM/ES/KPG/IDS


(Release ID: 1873762) Visitor Counter : 156