தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தூய்மை இயக்கத்தின் 2ம் கட்ட சிறப்பு பணியை தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்தது

Posted On: 03 NOV 2022 11:36AM by PIB Chennai

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் அதன் கீழ் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய மக்கள் தொடர்பகம், இந்திய செய்திதாள்கள் பதிவு அலுவலகம், மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் அலுவலகம், அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன், இந்திய பத்திரிகை குழுமம் உள்ளிட்ட அலுவலகங்களில் அக்டோர் 2 முதல் அக்டோர் 31, 2022 வரை இரண்டாம் கட்ட சிறப்பு தூய்மை இயக்கப் பணி நடைபெற்றது.

இதில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள், பொதுமக்களின் 320 குறைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டது.

108298 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு அதில்  66938 கோப்புகள் களையப்பட்டது. 2217 மின்னணு கோப்புகள்  பார்வையிடப்பட்டு அதில் 1868 கோப்புகள் களையப்பட்டன. இதன் மூலம் 1,75,447 சதுர அடி நிலம் காலியாகின. 4735 குவிண்டால் அளவிற்கு பழைய பொருட்கள் அகற்றப்பட்டதன் மூலம்  3,71,66,846 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. 336 இடங்களில் நடைபெற்ற தூய்மை பணி மூலம் 3766 பகுதிகள் தூய்மைபடுத்தப்பட்டன.

கடந்த செப்படம்பர் 29, 20222 அன்று அஹமதாபாத்தில் உள்ள தூர்தர்ஷன்   அலுவலகத்திற்கு சென்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், அங்கு நடைபெற்ற தூய்மை இயக்கப்பணியை ஆய்வு செய்தார்.

 

**************

SM/IR/RS/IDS



(Release ID: 1873409) Visitor Counter : 137