உள்துறை அமைச்சகம்

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு புது தில்லியில் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

Posted On: 31 OCT 2022 2:06PM by PIB Chennai

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு புது தில்லியில் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை உள்துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர், வெளியுறவு இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, உள்துறை இணை அமைச்சர் திரு நிஷித் பிரமானிக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை திரு அமித் ஷா செய்து வைத்தார்.
குஜராத்தின் மோர்பியில் நேற்று பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படுவதால் இன்றைய நிகழ்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்டு, அதன் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு தலைவரின் பிறந்தநாளில் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியமான செய்தியை முன்னெடுத்துச் செல்கிறோம் என்று அவர் கூறினார். சர்தார் வல்லபாய் படேலின் பெயரைச் சொன்னவுடனேயே இன்றைய
ஐக்கிய இந்தியாவின் வரைபடம் நினைவுக்கு வருகிறது என்றும், சர்தார் சாஹேப் இல்லையென்றால், இன்றைய பரந்த, உறுதியான, சக்தி வாய்ந்த இந்தியா சாத்தியமாகியிருக்காது என்றும் திரு ஷா கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்திய யூனியனை உருவாக்குவதுதான் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சனை என்றும், அதை உருவாக்குவதில் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான சர்தார் சாஹேப் முக்கியப் பங்காற்றினார் என்றும் திரு அமித் ஷா கூறினார். தனது திறமையான மற்றும் தனித்துவமான அரசியல் புத்திசாலித்தனத்தால் முழு நாட்டையும் ஒருங்கிணைத்தவர் பட்டேல் என்று அவர் கூறினார். அந்த நேரத்தில் கூட தேசவிரோத சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதில் ஈடுபட்ட போதிலும், சர்தார் சாஹிப்பின் முயற்சியால்தான், இந்தியாவின் ஒருங்கிணைந்த வரைபடத்தை நாம் இன்று பார்க்கிறோம் என்று
கூறினார்.

2047 ஆம் ஆண்டில் இந்தியா எந்த இடத்தில் இருக்கும் என்று கூட்டாக உறுதிமொழி எடுப்பதை இலக்காகக் கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இன்று இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

2047ல் சர்தார் சாகேப்பின் கற்பனை இந்தியாவை உருவாக்குவதில் 130 கோடி மக்கள் மற்றும் நாட்டின் மாநிலங்களின் கூட்டுத் தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அவர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு பல மைல்கற்களை எட்டியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக, அடிமைத்தனத்தின் அனைத்து வெளிப்பாடுகளிலிருந்தும் விடுபட்டு சுயமரியாதை, வளமான, வலிமையான மற்றும் பாதுகாப்பான இந்தியாவைக் கட்டியெழுப்புவதை நோக்கி நாடு நகர்ந்துள்ளது என்றார் அவர்.
நாட்டை ஒன்றிணைக்கும் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கியதன் மூலம், நாடுகளின் கூட்டுறவில் இந்தியா இன்று பெருமையுடன் நிற்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பல ஆண்டுகளாக சர்தார் படேலின் பாரம்பரியத்தை புறக்கணிக்க முயற்சித்த போதிலும், அவர் தனது குணங்களால் அழியாமல் இருந்தார் என்றும், இன்று சர்தார் படேல் தேசத்தின் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார் என்றும் கூறிய அவர், சர்தார் வல்லபாய்
படேலின் பாதையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு இன்று நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றார். இரும்பு மனிதர் சர்தார் பட்டேலின் மகத்தான செயல்களை நினைவுகூர்ந்த திரு அமித் ஷா, சர்தார் படேல் காட்டிய பாதையை பின்பற்றி 2047க்குள் அவரது கனவை நிறைவேற்ற நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1872238

                                                                                                                                            *************

SM/PK/RS/ KRS(Release ID: 1872308) Visitor Counter : 274