பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கத்தார் நாட்டின் அரசர் மேன்மைமிகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனியுடன் பிரதமர் உரையாடல்

प्रविष्टि तिथि: 29 OCT 2022 6:02PM by PIB Chennai

கத்தார் நாட்டின் அரசர் மேன்மைமிகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனியின் தீபாவளி வாழ்த்துக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

கத்தாரில் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள்  வெற்றிகரமாக நடைபெறுவதற்கு திரு மோடி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,

 

"கத்தார் நாட்டின் அரசர் மேன்மைமிகு @TamimBinHamad உடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.  அவரது அன்பான தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்தேன்.  மேலும் கத்தாரில் வெற்றிகரமான @FIFAWorldCupக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். 2023—ஆம் ஆண்டில் இந்தியா-கத்தார் ராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகளைக் ஒன்றாக இணைந்து கொண்டாட நாங்கள் ஒப்புக்கொண்டோம்." என்று தெரிவித்திருந்தார்.

*********


(रिलीज़ आईडी: 1871857) आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam