பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

10 லட்சம் பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் இயக்கத்திற்கான வேலைவாய்ப்பு முகாமை அக்டோபர் 22 அன்று பிரதமர் தொடங்கிவைப்பார்


முதல் தொகுதியில் 75,000 புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்

புதிதாக நியமிக்கப்படுவோருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன

தெரிவு நடைமுறை எளிமையாக்கப்பட்டு பணி நியமன நடைமுறையை வேகப்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் குடிமக்கள் நலனை உறுதி செய்தலை நோக்கிய அரசின் உறுதிப்பாடு தொடர்வதை வெளிப்படுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமையும்

Posted On: 20 OCT 2022 1:50PM by PIB Chennai

 

10 லட்சம்  பணியாளர்களை  பணிக்கு அமர்த்தும் இயக்கத்திற்கான வேலைவாய்ப்பு முகாமை அக்டோபர்  22 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைப்பார்.  இந்த முகாமில் புதிதாக நியமிக்கப்படவிருக்கும் 75,000  புதிய பணியாளர்களுக்கு  நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.  நியமனதாரர்களிடையே, பிரதமர் உரையாற்றுவார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் குடிமக்கள் நலனை உறுதி செய்தலை நோக்கிய அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் இது முக்கியமான நடவடிக்கையாகும். அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் தற்போதுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பிரதமரின் வழிகாட்டுதல்படி அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் இயக்கம் போல்  செயல்படுகின்றன.

நாடு முழுவதும் இருந்து தெரிவு செய்யப்பட்டு புதிதாக பணி அமர்த்தப்படுவோர் மத்திய அரசின் 38 அமைச்சகங்கள் /துறைகளில் பணியில் சேர்வார்கள். பிரிவு-ஏ, பிரிவு-பி (அரசிதழ் பதிவு பெற்றவர்கள்), பிரிவு-பி (அரசிதழ் பதிவு பெறாதவர்கள்), பிரிவு-சி என பல்வேறு நிலைகளில், இவர்கள் அரசுப் பணியில் சேர்வார்கள். மத்திய ஆயுதப்படை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்,  கீழ்நிலை எழுத்தர்கள், சுருக்கெழுத்தர்கள்,  தனி உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பலவகை பணி செய்வோர் (எம்டிஎஸ்) உள்ளிட்ட பதவிகளுக்கான  நியமனங்களாக இவை இருக்கும்.

அமைச்சகங்கள் மற்றும் துறைகள்  தாங்களாகவோ அல்லது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் நியமன வாரியம் போன்ற  பணிநியமன முகமைகள் மூலம், இயக்கம் போல் இந்த பணி நியமனங்கள் நடைபெறுகின்றன.  இதனை விரைவுப்படுத்த  தெரிவு நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு தொழில்நுட்ப ரீதியாகவும், நடத்தப்படுகிறது. 

************** 

SMB/Gee/SM/Sne


(Release ID: 1869667) Visitor Counter : 379