பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

2023-24 சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 18 OCT 2022 1:34PM by PIB Chennai

2023-24 சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையை உறுதி செய்ய குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தி உள்ளது. பருப்பு வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.500-ம், கடுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.400-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குங்குமப்பூவின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் குவிண்டாலுக்கு ரூ.209 அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோதுமை, உளுந்து, பயறு, கொள்ளு ஆகியவற்றுக்கு குவிண்டாலுக்கு ரூ.110-ம், பார்லிக்கு குவிண்டாலுக்கு ரூ.100-ம் அதிகரிக்கப்படுகிறது.

2023-24 சந்தைப்பருவத்தில் அனைத்து ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை

(ரூ.குவிண்டாலுக்கு)

வ.எண்.

பயிர்கள்

எம்எஸ்பி

2022-23

எம்எஸ்பி

2023-24

உற்பத்திச் செலவு* 2023-24

எம்எஸ்பி-யில் உயர்வு

செலவில் திரும்ப கிடைப்பது (சதவீதத்தில்)

1

கோதுமை

2015

2125

1065

110

100

2

பார்லி

1635

1735

1082

100

60

3

பயறு வகைகள்

5230

5335

3206

105

66

4

பருப்பு

5500

6000

3239

500

85

5

ராப்சீட் & கடுகு

5050

5450

2670

400

104

6

குங்குமப்பூ

5441

5650

3765

209

50

 

* செலவு என்பது கூலிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்கள், எந்திரக் கருவிகள், நிலத்திற்கு வழங்கப்படும் குத்தகை, விதைகள், உரங்கள், பாசன கட்டணம், பம்ப் செட்டுக்கு பயன்படுத்தும் டீசல் அல்லது மின்சாரம் போன்ற அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியதாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1868760

*********

SMB/RR/ANAND



(Release ID: 1868834) Visitor Counter : 482